மகர ஆசனம்!

மகரம் என்ற வட மொழிச் சொல்லுக்கு முதலை என்று பொருள். மகர ஆசனம் முழுத் தளர்ச்சியை அளிக்கும் ஒரு ஆசனமாகும்.

செய்முறை:

குப்புறப்படுத்துக் கொள்ளவும்.

வயிறு, மார்பு, முகவாய்க்கட்டை தரையைத் தொடவேண்டும்.

கால்களை நீட்டவும்.

கைகள் இருபுறமும் பக்கவாட்டில் இருக்கவேண்டும்.

கால்களை வசதியாக அகற்றிக் கொள்ளவும், தரையைத் தொடுமாறு பார்த்துக் கொள்ளவும்.

குதிகால்கள் இரண்டும் ஒன்றையொன்று நோக்குமாறு வைத்துக் கொள்ளவேண்டும்.

கால்களின் முனைகள் தரையில் பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

கணுக்கால்களை வெளிப்புறத்தை நோக்கி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

இப்போது கால்களையும், உடலின் நடுப்பகுதியையும் உயர்த்தவும்

WD
வலது கையை இடது தோளுக்கு அடியில் கொண்டு வரவும்.

வலது கையால் இடது தோளை லேசாக பற்றவும்.

இடது கையை வலது தோளின் மீது வைக்கவும்.

இப்போது இடது கையால் வலது தோளை லேசாகத் தொடவும்.

இந்த நிலையில் முழங்கைகள் மடிக்கப்பட்டுள்ளபோது, ஒன்றின் மேல் ஒன்று உள்ளபோது, இரட்டை முக்கோண வடிவம் கிடைக்கிறது.

உங்களது முன் கைகள் எதிர்ப் பகுதியில் உள்ள மேல் கைகளின் மேல் இருக்கும்.

உருவான இரட்டை முக்கோணத்தில் உங்கள் நெற்றியை இருத்த வேண்டும்.

கண்களை லேசாக மூடி சிறிது நேரம் இருக்கவும்.

உங்களால் முடிந்த வரையில் இந்த நிலையில் இருக்கவும்.

பிறகு மெதுவாக உட்காரும் நிலைக்கு திரும்பவும்.

பலன்கள்:

வயிற்று உபாதைகளும், முதுகெலும்பின் பக்கவாட்டு வளைவும் சரியாகும்.

சிறு குடல்கள் சீராக இயங்கி சீரண உறுப்புகள் நன்றாக இயங்கும்.

உயர் ரத்த அழுத்தம் குறையும்.

உறுப்பு மற்றும் சிறு நீர்க் கோளாறுகள் குணமாகும்.

சுவாசத் தொல்லைகள் நீங்கும்.

எந்த ஒரு கடுமையான பணிக்கு பிறகும் இந்த ஆசனத்தை செய்யலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்