புதன், 11 நவம்பர் 2009 (18:27 IST)
எல்லோருக்கும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு வழி தெரியாமல் இருப்பார்கள்.
இளமையாக இருக்க ஆசனங்கள் உதவும் என்கிறார் நமது ஆசிரியர் சுப்ரமணியன்.
அதாவது ஆசனங்களில் சிரசாசனம் ராஜா என்றும், சர்வாங்காசனம் ராணி என்றும் அழைக்கப்படுகிறது.
இதில், சர்வாங்காசனம், விபரீத கர்ணி, மச்சாசனம், சிரசாசனம் ஆகியவற்றை முறையாக செய்து வந்தால் எந்த ஆரோக்கியக் குறைபாடும் இன்றி இளமையாக வாழலாம்.
ஆனால், இவற்றை முறையாக செய்வது மட்டுமின்றி, இதற்கு இணையான அதாவது நின்றபடி செய்யும் ஆசனங்
களையும் செய்ய வேண்டியது அவசியமாகிறது.
மேலும், இந்த ஆசனங்கள் ஒவ்வொன்றிற்கும் நடுவே சாவாசனம், சுவாசனம், நித்திரை ஆசனம் ஆகியவற்றையும் செய்ய வேண்டும்.
சவாசனம் என்பதை தெற்கு நோக்கி தலை வைத்தபடியும், நித்திரையாசனத்தில் மேற்கு நோக்கி தலை வைத்தபடியும் செய்ய வேண்டும்.