தமிழகத்தில் கலெக்‌ஷன் அள்ளிய படங்கள்! – 2022ன் டாப் 10 வசூல் மன்னர்கள் யார்?

திங்கள், 19 டிசம்பர் 2022 (15:47 IST)
இந்த ஆண்டில் வெளியாகி மக்களிடையே பெரும் வசூல் சாதனை படைத்த படங்களின் டாப் 10 லிஸ்ட்

கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக முடங்கி போயிருந்த சினிமா இந்த ஆண்டில் பல பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டுகளை கொடுத்து நிமிர்ந்து எழுந்துள்ளது. முக்கியமாக தென்னிந்திய படங்கள் இந்திய அளவில் பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்துள்ளன. அப்படி தமிழ்நாட்டில் அதிகம் கலெக்‌ஷனை அள்ளிய டாப் 10 படங்கள் இதோ

10. எதற்கும் துணிந்தவன்

சூர்யா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் பெரிய வரவேற்பை பெறாவிட்டாலும் வசூல் கணக்கில் மொத்தமாக ரூ.71.4 கோடி வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.45.58 கோடிக்கும், மொத்தமாக இந்தியாவில் ரூ.57.4 கோடிக்கும் படம் ஓடியுள்ளது.

9. லவ் டுடே

பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்த இந்த படம் தமிழ் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் 54.76 கோடி வசூல் செய்துள்ள இந்த படம், மொத்தமாக உலக அளவில் 83.55 கோடி வசூலித்துள்ளது.

8. ஆர்.ஆர்.ஆர்

ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடித்த இந்த படம் உலக அளவில் மொத்தமாக 1140 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தமிழ்நாட்டில் மட்டும் 58.48 கோடி வசூல் செய்தது. இந்திய அளவில் 903.68 கோடி வசூல் செய்துள்ளது.

7. டான்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான காமெடி படமான டான் தமிழ்நாட்டில் மட்டும் 75.17 கோடி வசூல் செய்தது. உலக அளவில் மொத்தமாக 114 கோடி வசூல் செய்துள்ளது.

6. திருச்சிற்றம்பலம்

தனுஷ் நடிப்பில் வெளியான இந்த படம் எதிர்பாராத பெரும் வரவேற்பையும், வெற்றியையும் பெற்றது. தமிழ்நாட்டில் 75.88 கோடி வசூல் செய்த இந்த படம் உலக அளவில் மொத்தமாக 117.2 கோடி வசூலித்துள்ளது.

5. வலிமை

அஜித் குமார் நடிப்பில் நீண்ட காலம் எதிர்பார்த்திருந்து வெளியான படம். சுமாரான வரவேற்பை பெற்றபோதிலும் தமிழகத்தில் 102.02 கோடி வசூலித்த இந்த படம் உலக அளவில் 164 கோடி வசூல் செய்தது.

4. கேஜிஎஃப் சாப்டர் 2

யஷ் நடிப்பில் பிரசாத் நீல் இயக்கிய இந்த படம் இந்தியா முழுவதும் பெரும் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் 105 கோடி வசூலித்தது. இந்திய அளவில் 1000 கோடி ரூபாயும், உலக அளவில் 1208 கோடி ரூபாயும் வசூலித்தது.

3. பீஸ்ட்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த இந்த படம் விமர்சன அளவில் வரவேற்பை பெறாவிட்டாலும் வசூல் அளவில் குறிப்பிடத்தகுந்த கவனத்தை பெற்றது. தமிழகத்தில் ரூ.119.98 கோடி வசூலித்தது. உலக அளவில் பீஸ்ட் வசூல் 216.58 கோடியாக உள்ளது.

2. விக்ரம்

கமல்ஹாசன் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் அமைந்த ஆக்‌ஷன் எண்டெர்டெயினர் விக்ரம். தமிழகத்தில் மட்டும் 212 கோடி வசூலித்த விக்ரம், உலக அளவில் மொத்தமாக ரூ.414 கோடி வசூலித்துள்ளது.

1. பொன்னியின் செல்வன் பாகம் 1

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம், இந்த ஆண்டின் தமிழ் சினிமாவின் மணிமுடியாக உள்ளது. தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேல் திரையரங்குகளில் ஓடிய பொன்னியின் செல்வன் தமிழ்நாட்டில் மட்டும் 221.22 கோடி வசூலித்துள்ளது.

இந்த ஆண்டில் தமிழில் வெளியான படங்கள், டப்பிங் படங்கள் அனைத்திலும் ஒப்பிடும்போது அதிகமான வசூலை தமிழ்நாட்டில் அள்ளிய படமாக பொன்னியின் செல்வன் உள்ளது. உலக அளவில் 488 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்