இந்நிலையில் தற்போது யூட்யூப் நிறுவனம் உலக சுகாதார நிறுவனம் மற்றும் மருத்துவ அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான மற்றும் பயனுள்ள, தடுப்பூசிகள் குறித்த உறுதிப்படுத்தப்பட்ட புதிய வழிகாட்டுதல்களுடன் புதிய மருத்துவ கொள்கைகளை வெளியிட்டுள்ளத்.
மேலும் தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை பரப்பும் வீடியோக்கள் நீக்கப்படும் என யூட்யூப் நிறுவனம் எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டில் தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக 1,50,000 வீடியோக்கள் நீக்கப்பட்டதாக யூட்யூப் தெரிவித்துள்ளது.