தடுப்பூசிக்கு பதில் வெறி நாய்க்கடி தடுப்பூசி - தானேவில் சர்ச்சை

புதன், 29 செப்டம்பர் 2021 (10:41 IST)
தானேவில் கொரோனா தடுப்பூசிக்கு பதில் ஒருவருக்கு ரேபிஸ் நாய் தடுப்பூசி போட்டதால் சர்ச்சை. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடுவது ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தானேவில் கொரோனா தடுப்பூசிக்கு பதில் ஒருவருக்கு ரேபிஸ் நாய் தடுப்பூசி போட்டதால் சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆண் ஒருவருக்கு வெறி நாய்க்கடி தடுப்பூசி போட்ட மருத்துவர், செவிலியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்