உலகின் மிக ஆபத்தான நாடு பாகிஸ்தான். அமெரிக்க உளவுப்படைஅதிகாரி தகவல்

வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (04:50 IST)
உலகில் அதிகம் வன்முறை நடைபெறும் நாடுகளில் ஒன்று பாகிஸ்தான். இங்கு குண்டுவெடிப்பு என்பது அன்றாட நிகழ்வுகளில் ஒன்று. மேலும் தீவிரவாதிகளுக்கு அரசே ஊக்கமும் நிதியும் கொடுத்து வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.



இந்நிலையில் அமெரிக்க உளவுப்படையின் (சி.ஐ.ஏ.) நிலைய அதிகாரியாக பணியாற்றிய கெவின் ஹல்பெர்ட் என்பவர் பாகிஸ்தான் உலகிலேயே ஆபத்தான நாடு என்று கூறியுள்ளார்.

சைபர் பிரீப் என்ற இணையதளத்தில் அவர் பாகிஸ்தான் குறித்து குறிப்பிடும்போது, "உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் மிகவும் ஆபத்தான நாடாக இருக்கக்கூடும். பாகிஸ்தானின் தோல்வி, உலகத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பாகிஸ்தானுக்கு அமெரிக்காவும், சர்வதேச நிதியமும் கோடிக்கணக்கான டாலர்கள் நிதி உதவி செய்து வருகின்றன. அமெரிக்கா தொடர்ந்து பாகிஸ்தானுக்கு நிதி உதவி செய்து, அவர்களை நல்ல நடத்தையை நோக்கி வழிநடத்த முயற்சி செய்கிறது. ஆனால், அதில் ஓரளவுதான் வெற்றி கிடைத்துள்ளது என்று அவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்