உலகப் பெரும் பணக்காரர் பட்டியல் : மீண்டும் முதலிடம் பிடித்த பில்கேட்ஸ் !
வெள்ளி, 25 அக்டோபர் 2019 (19:28 IST)
கடந்த சில வருடங்களாக உலகின் மிகபெரும் பணக்கார்கள் பட்டியலில் முதலிடத்தை அமேசான் நிறுவனர் மற்றும் செயல் அதிகாரி ஜெஃப் பேஜோல் வகிந்து வந்தார். இந்நிலையில் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள பத்திரிக்கையில் பில்கேட்ஸ் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
அதன்படி அமேசான் நிறுவனம் 3வது காலாண்டில் பங்கு சந்தையில் 7 பில்லியன் டாலர் அளவுக்கு பெரும் இழப்பை சந்துள்ளது. அமேசான் நிறுவனப் பங்குகளும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில் பேஜோஸின் சொத்து மதிப்பு 103 . 9 பில்லியன் டாலராக குறைந்தது. எனவே இரண்டாவது இடமிடித்திருந்த பில்கேட்ல் 105.7 பில்லியன் டாலர் சொத்துகளை கொண்டுள்ள பில்கேட்ஸ் மீண்டும் முதலிடத்துகு வந்துள்ளார்.
மேலும், 24 ஆண்டுகளாக தொடந்து முதலிடத்தில் இருந்த மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் கடந்த 2018 ஆம் ஆண்டு 2வது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், 160 பில்லியன் டாலர் சொத்து மதிபுடன் பேஜோஸ் முதலிடம் பிடித்தார்.