500 கிலோ எடை; உலகின் குண்டு பெண் மரணம்!!

திங்கள், 25 செப்டம்பர் 2017 (15:35 IST)
உலகின் மிக குண்டான பெண்ணாக கருதப்பட்டவர் இமான் அகமது. இவர் அபுதாபியில் உடல் எடை குறைவதற்கான சிகிச்சை பெற்ற போது மரணமடைந்துள்ளார்.


 
 
எகிப்து நாட்டை சேர்ந்த இமான் அகமது 500 கிலோ எடையுடன் உலகின் குண்டு பெண்ணாக திகழ்ந்தார். இவர் தனது உடல் எடையை குறைக்க சில மாதங்களுக்கு முன்னர் மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
 
அதன் பின்னர் அபுதாபிக்கு சென்று அங்கு ஒரு தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு 20 டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
 
ஆனால், அவருக்கு சில நாட்களாக சிறுநீரகம் மற்றும் இதயம் சம்மந்தமான கோளாறுகள் இருந்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்