உலகம் முழுவதும் வேகமாக குறையும் கொரோனா! – உலக சுகாதார அமைப்பு!

வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (12:04 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில் தற்போது வேகமாக குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு முதலாக கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து வருகின்றன. கொரோனாவால் உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு வழிகாட்டு முறைகள், தடுப்பூசிகள் உள்ளிட்டவற்றை மக்களுக்கு பல்வேறு நாடுகளும் வழங்கி கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உலக அளவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் உலகம் முழுவதும் கொரோனாவால் 54 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முந்தைய வாரங்களை விட இது 24 சதவீதம் குறைவு என்று கூறப்பட்டுள்ளது.

அதே சமயம் ஆசிய நாடுகள் சிலவற்றில் கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்தாலும் பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது,. இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்