ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் தாலிபான் அமைப்பு ஆட்சியை பிடித்தது. ஆட்சியை பிடித்தது முதலாக அனைத்து துறைகளிலும், செயல்பாடுகளிலும் கடும் கட்டுப்பாடுகளை தாலிபான் விதித்து வருகிறது.
இது குறித்து அந்நாட்டின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் அமைச்சகத்தின் தலைவர் அஜிஸ் ரகுமான் கூறும்போது, மனித உருவங்களை காட்சிப்படுத்துவது ஷரியத் சட்டத்துக்கு எதிரானது என்பதால் கடைகளில் உள்ள பொம்மைகளின் தலைகளை துண்டிக்குமாறு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம்.