’’டூ பீஸ் ’’உடை அணிந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பெண் !

வெள்ளி, 22 மே 2020 (19:28 IST)
ரஷ்ய நாட்டில் சுமார் 3 லட்சம் பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

டூபீஸ் உடை அணிந்து கொண்டு கொரொனா வார்டில் தைரியமாக பணிபுரிந்த நர்ச்சுக்கு மாடலாகும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

ரஷ்ய நாட்டில் சுமார் 3 லட்சம் பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 193 கி.மீ,, தொலைவில் துலா என்ற நகரத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வார்டு உள்ளது. இங்கு ஒரு இளம் நஸ்ர் பணிபுரிந்து வருகிறார். இப்போது ரஷ்யாவில் கோடை காலம் என்பதால் டூபீஸ் நீச்சல் உடை அணிந்து அதற்கு மேல் கொரொனா வார்டில் பணிபுரிவதற்குரிய பி.பி.இ என்று அழைக்கப்படும் முழூடல் கவச உடையை அணிந்துள்ளார்.

இவரது உடைக்கு கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளது.  சுகாதாரம் மற்றும் தோற்ற்த்துக்கு ஏற்ற உடையை நர்ஸ் அணிய வேண்டும் என அவருக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆனால் அவருக்கு சக நர்ஸ்களும் மருத்துவர்களும் ஆதரவு தெரிவித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டூபீஸ் உடை அணிந்துள்ள நர்ஸ் நடியா (23) புகைப்படம் இணைதளத்தில் வைரலானதால் பிரபல உள்ளாடை நிறுவனமான மிஸ் எக்ஸ் நடியாவை தங்கள் கம்பெனி விளம்பர் மாடலாக அறிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்