தூங்கி கொண்டிருந்த பெண் வன்கொடுமை! – நடுவானில் நடந்த பயங்கரம்!

வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (09:40 IST)
அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்து சென்ற விமானத்தில் பெண் ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் இருந்து யுனிட்டெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டு லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் சென்றது. இந்த விமானம் நடு வானில் சென்று கொண்டிருந்தபோது அதில் உறங்கிக் கொண்டிருந்த 40 வயது பெண்ணை சக பயணி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் சிறப்பு அதிகாரிகள் இதுகுறித்த விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பெண்ணை நியூஜெர்சியில் இருந்து லண்டன் வந்த இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். நடுவானில் நடந்த இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்