இந்தியா - இலங்கை பாலத்தை குண்டு வைத்து தகர்ப்பேன்: இலங்கை எம்.பி. சர்ச்சை பேச்சு

சனி, 6 ஆகஸ்ட் 2016 (09:02 IST)
ராமேஸ்வரம், தலைமன்னார் பகுதிகளை இணைக்கும் விதமாக பாலம் ஒன்று அமைக்கப்படும் என இலங்கை அமைச்சர் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்நாட்டு எம்.பி. ஒருவர் அதனை குண்டு வைத்து தகர்ப்பேன் என சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார்.


 
 
ஹெல உறுமய கட்சி தலைவரும் எம்.பியுமான உதய கம்மன்பில என்பவர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது,  அமைச்சர் கபீர் காசிம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் கட்டப்போவதாக அறிவித்துள்ளார்.
 
இந்த பாலத்தின் மூலம் இந்தியாவையும், இலங்கையையும் இணைப்பதாக கூறினாலும், அது இலங்கையை தமிழ்நாடாக மாற்றிவிடும். இந்தியாவில் வேலையில்லாமல் இருப்பவர்கள் இலங்கைக்கு வருவார்கள். இதனால் சிங்களரக்கு என இருக்கும் ஒரே நாடும் இல்லாமல் போய்விடும்.
 
எனவே பாலம் அமைக்கும் நடவடிக்கையை கைவிடவேண்டும், இல்லையென்றால் தேசிய பாதுகாப்பு கருதி அந்த பாலத்தை குண்டு வைத்து தகர்ப்பேன் என அவர் எச்சரித்தார். அவரின் இந்த சர்ச்சை பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்