கொசுகள் ஏன் கடிக்கின்றன?

ஞாயிறு, 15 மே 2016 (21:48 IST)
வீடுகளை சுற்றி உள்ள எரிச்சலூட்டும் கொசுகள் எப்பொதும் மனிதர்களையே குறித்து வைத்து கடிக்கின்றன.

 

 
வசந்த காலம் தொடங்குவதால் மழை பெய்யும், செடிகள், மரங்கள் எல்லாம் பசிமையாக இருக்கும் காலம். அதனால் கொசு தொல்லை ஆரம்பமாகிவிடும்.
 
ஆரம்ப காலத்தில் இருந்து அழிக்க முடியாத இனமாக வளர்ந்து வரும் கொசு, நம்மை கடிப்பது எரிச்சலூட்டும் செயலாக இருக்கும். என்னதான் ஆல் அவுட் என்னும் திரவத்தை பயன்படுத்தினாலும் நாம் தான் ஆவுட் ஆகிறோம்.
 
கொசுவின் உயிரியல் மற்றும் பழகங்களை அறிந்து கொண்டால் நமக்கு பதில் கிடைத்துவிடும்.
 
கொசுகள் பொதுவாக குளிர் நிலையை விரும்பும். அதனால்தான் இரவு நேரங்களில் மட்டும் கொசு வெளியே வருகிறது. அவை கார்பன் டை ஆக்சைடு, நம் உடம்பில் இருந்து வெளிவரும் வியர்வை மற்றும் கறுப்பு நிற உடைகளுக்கு ஈர்ப்புடையது. 
 
கொசுகளை அழிக்க முடியாத நம்மால் அவைகளிடம் இருந்து தப்ப முடியும். அதற்கு மேலே குறிப்பிட்டுள்ள விஷயகளை மனதில் கொண்டு அதற்கேற்ப செயல்பட்டால் கொசு கடியில் இருந்து தப்பிவிடலாம்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்