ராஜபக்சேவின் முன்னாள் செயலரை ஏன் கைது செய்யவில்லை : நீதிபதி கேள்வி

சனி, 10 அக்டோபர் 2015 (18:42 IST)
ராஜபக்சேவின் முன்னாள் செயலரை மேல்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்னர் ஏன் கைது செய்யவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சேவின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு மானிய ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷா பல்பிட ஆகியோர் மீது கடந்த ஜனாதிபதித் தேர்தல் நடந்தபோது 600 மில்லியன் ரூபாய் அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
 
எனவே இவர்களுக்கு எதிராக அட்டர்னி ஜெனரல் புதன்கிழமை நேரடியாக மேல்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
 
ஆனால், அரசு சொத்துக்கள் தொடர்பான சட்டத்துக்கு அமைய இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் நபர்கள் காவல்துறையினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவது அவசியமென்று மாஜிஸ்ட்ரேட் நீதிபதி வியாழனன்று தெரிவித்தார்.
 
அப்படி செய்யாமல், லலித் வீரதுங்க மற்றும் ஆஷா பல்பிட ஆகிய சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தவறியதன் மூலம் காவல்துறையினர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் அதிகாரத்தை அவமதித்துள்ளதாக நீதிபதி நிஷாந்த பிரிஸ் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்