மார்ஸில் சாப்பிடுவதற்கு சிறந்த உணவு எது? ரூ.3 கோடி பரிசு - நாசா அறிவிப்பு

திங்கள், 15 பிப்ரவரி 2021 (17:15 IST)
விண்வெளி ஆராய்ச்சியில் உலகப் புகழ்பெற்ற  நாசா நிறுவனம் ஒரு முக்கியமான போட்டியை அறிவித்துள்ளது.

அமெரிக்க நாட்டிலுள்ள நாசா நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சியில் உலகப்புகழ் பெற்றது ஆகும்.

இந்நிறுவனத்தில் அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அவ்வப்போது ஊக்கும்வகையில் போட்டிகள் ஊக்குவிப்புகள் செய்து வருகிறது.

இந்நிலையில், இன்று மார்ஸ் என அழைக்கப்படும்செவ்வாய் கோளில் சாப்பிடுவதற்கு சிறந்த உணவு எது என்று கூறும் நபர்களுக்கு பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

மேலும் மார்ஸ் கோளில் விஞ்ஞானிகள் உண்பதற்கு ஏற்ற ஆரோக்கியமான் உணவைப் பரிந்துரை செய்யும் நபர்களுக்கு ரூ.3.6 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது நாசா அமைப்பு.

மேலும் இப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெரும் சுமார் 20 குழுக்களுக்கு ரூ.3.6 கோடி பகிர்ந்து கொடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்