சமீபத்தில் வடக்கு காஸா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரித்தது. ஆனால் அவர்கள் வெளியேற போதிய அவகாசம் கூட அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அங்கு நிறைய பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், போரினால் காயம்பட்டவர்கள் உள்ள நிலையில் உடனடியாக வெளியேறுவது இயலாத காரியம் என ஐ.நா சபையும் இஸ்ரேலுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் இஸ்ரேலோ மக்கள் வெளியேற வடக்கு காசாவில் உள்ள சலாஹ் அல் தீன் சாலை பாதுகாப்பானது என்றும், அங்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என்றும் கூறியது. அதை நம்பி ஏராளமான மக்கள் அந்த சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது அந்த சாலையில் குண்டுகளை வீசி தாக்கியுள்ளது இஸ்ரேல். இந்த தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகியுள்ள நிலையில், பலரும் படுகாயமடைந்துள்ளனர்.