அந்த வீடியோவில் மாக்ரோன் முகத்தில் அவருடைய மனைவி ஒரு அறை கொடுத்ததுபோல் தோன்றும் காட்சி இடம்பெற்றுள்ளது. அவர்கள் விமானத்தின் உள்ளே இருக்கும் போது, கதவின் அருகே மாக்ரோன் நின்றபோது இந்த காட்சி பதிவாகியுள்ளது. அதிபர் அதற்கு எதிர்வினையில்லாமல் அமைதியாக இருப்பதும், பின்னர் வெளியே இருவரும் வருவதும் அந்த வீடியோவில் தெரிகிறது.
இது குறித்து விளக்கம் அளித்த அதிபர் மாக்ரோன், “நாங்கள் சில நேரங்களில் விளையாட்டுத்தனமான நடந்துகொள்வது வழக்கம். வெளியில் இருந்து அது வேறு மாதிரியான தோற்றத்தை தரலாம். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமில்லை,” என கூறினார்.