காரணமின்றி வெளியாகும் ரத்தம்; 7 வயது சிறுமி அவதி: அதிர்ச்சி வீடியோ!!

வெள்ளி, 5 மே 2017 (12:01 IST)
தாய்லாந்தில் உள்ள எழு வயது சிறுமிக்கு விசித்திர நோய் ஒன்று தாக்கியுள்ளது. இதனால் காரணமின்றி அந்த சிறுமியின் கண், மூக்கு, காதில் இருந்து ரத்தம் நிற்காமல் வெளியேறி வருகிறது.


 
 
இந்த சிறுமிக்கு வந்துள்ள நோய் Hemotohidrosis என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் இந்த நோயால் தாக்கப்பட்ட சிறுமிக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டுள்ளது.
 
இது நாளடைவில் தீவிரமாகி கண், மூக்கு, காது, உள்ளங்கை போன்ற உடலுருப்புகளில் இருந்து ரத்தம் வெளியேற துவங்கி உள்ளது. ரத்தம் வெளியேரும் போது சிறுமிக்கு வலி இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சிறுமிக்கு ரத்தம் வெளியேருவதை வீடியோவாக எடுத்து அவரது தாய் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்