உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம்! – சீனாவின் சாதனையை முறியடித்த வியட்நாம்!

திங்கள், 30 மே 2022 (16:36 IST)
வியட்நாமில் கடந்த மாதம் திறக்கப்பட்ட கண்ணாடி பாலம் உலகின் மிக நீளமான கண்ணாடி பாலமாக கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

வியட்நாமில் உள்ள சான் லா பகுதியில் உள்ள வனப்பகுதிகளின் அழகை பார்த்துக் கொண்டே நடமாடும் வகையில் அங்கு கண்ணாடி பாலம் அமைக்க வியட்நாம் அரசு முடிவு செய்தது. கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த இந்த பணி முடிவடைந்து கடந்த மாதம் பாச் லாங் என்னும் அந்த கண்ணாடி பாலம் திறக்கப்பட்டது.

இதன்மூலம் உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் என்ற கின்னஸ் சாதனையை பாச் லாங் பாலம் பெற்றுள்ளது. இந்த பாலம் 2073 அடி நீளம் கொண்டது. தரை மட்டத்திலிருந்து 492 அடி உயரத்தில் இந்த பாடம் கட்டப்பட்டுள்ளது.

முன்னதாக 1,726 அடி நீளம் கொண்ட சீனாவின் குவாங்டாங் கண்ணாடி பாலம்தான் உலகின் மிக நீளமான கண்ணாடி பாலமாக இருந்த நிலையில் அந்த சாதனையை வியட்நாம் முறியடித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்