நியூசிலாந்தில் துப்பாக்கிச் சூடு வீடியோ விவகாரம் : பேஸ்புக் விளக்கம்
புதன், 20 மார்ச் 2019 (18:41 IST)
நியூஸிலாந்தில் கடந்த வாரம் முஸ்லிம் பிராத்தனை கூடத்தில் ஒருவர் புகுந்து துப்பாக்கிச் சுடு நடத்தினார். இதில் 5 பேர் பரிதாமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில்,பலியானவர்களில் 5 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 1 பெண் உட்பட மொத்தம் 4 பேரை கைது செய்துள்ளனர். இந்தத் தாக்குதலை நடத்தியவன் இதை நேரடியாக பேஸ்புக்கில் ஒளிபரப்பு செய்தான். இதற்கு பலரும் எதிர்ப்புகளை பதிவுசெய்தனர்.
இதுபற்றி பேஸ் புக் நிறுவனத்துக்கு புகார் வந்ததும் உடனடியாக அந்த வீடியோவை டெலிட் செய்தனர். இதற்கு பேஸ்புக் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிராக்ஸி தளங்கள் மூலமாகத்தான் அதிகளவில் நியூஸிலாந்து வீடியோ பகிரப்பட்டது.
மேலும் அந்த வீடியோவை டவுன்லோடு செய்த தீவிரவாதிகள் அதை பிராக்ஸி தளங்கள் மூலமாக பரப்பியதாக பேஸ்புக் நிறுவனம் தெருவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.