பீட்டாவுக்கு எதிரியாகும் அதன் ஆதரவு நாடுகள்!!

வியாழன், 19 ஜனவரி 2017 (12:19 IST)
தமிழர்கள் வாழும் ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் நடந்து வருகிறது.


 
 
பீட்டா அமைப்பு ஆதிக்கம் செலுத்தி உள்ள அமெரிக்காவில் 25 இடங்களில் போராட்டம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
 
மேலும், வட அமெரிக்காவின் மத்திய பகுதியான மிசௌரி மாநில தமிழ்ச் சங்கத்தினர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
 
இந்த போராட்டம் குறித்து கூறியதாவது, 5000 ஆண்டுகளாக நடைப்பெற்று வரும் தமிழினத்தின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டு திருவிழாவை யார் தடை செய்தாலும் அதனை எதிர்ப்போம்.
 
தமிழகத்தில் உயிரைக் கொடுத்து போராட்டம் நடத்தும் இளைஞா்களுக்கு, ஆதரவாக நாங்களும் போராடுவோம். இனி அமெரிக்கா முழுவதும் போராட்டம் தீயாய் பற்றி எரியும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எச்சரித்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்