சிறுநீரகம் இதயத்துக்குள் இருக்கிறது- அமெரிக்க அதிபரின் சர்ச்சை பேச்சு

வியாழன், 11 ஜூலை 2019 (15:50 IST)
சமீப காலமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசுவது, ட்விட்டரில் பதிவிடுவது எல்லாமே சர்ச்சைக்கு உள்ளாகின்றன. அந்த வகையில் தற்போது “சிறுநீரகம் இதயத்துக்குள் இருக்கிறது” என்று மனித உடலமைப்பிலேயே இல்லாத ஒரு தகவலை சொல்லி மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறார் ட்ரம்ப்.

மருத்துகுழு ஒன்றின் விழாவில் கலந்துகொண்ட அதிபர் ட்ரம்ப் உடல் ஆரோக்கியம் குறித்து பல விசங்களை பேசினார். அப்போது “நமக்காக அதிகம் உழைப்பது சிறுநீரகம்தான். அதனால்தான் எப்போது இதயத்தில் அதற்கு தனி இடம் இருக்கிறது” என கூறியுள்ளார்.

சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தைதான் ட்ர்ம்ப் இதயத்துக்கு நெருக்கமாக இருப்பதாக சொல்ல வந்திருக்கிறார் என பலர் விளக்கமளித்துள்ளனர். ஆனாலும் ட்ரம்ப் பேசிய அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த நெட்டிசன்கள் “நிலவு செவ்வாயின் ஒரு பகுதியில் இருக்கிறது. சிறுநீரகம் இதயத்தில் இருக்கிறது. ட்ரம்ப் யுரேனஸில் இல்லை என்று நம்புவோம்” என்று கிண்டலடித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்