போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவியிருப்பேன்! – ட்ரம்ப் சர்ச்சை பேச்சு!

ஞாயிறு, 31 மே 2020 (10:36 IST)
அமெரிக்காவில் கருப்பினத்தவர் கொல்லப்பட்டதற்காக போராடுபவர்கள் மீது நாயை ஏவி விட்டிருப்பேன் என அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மினசொட்டா மாகாணத்தில் ஜார்ஜ் ப்ளாய்ட் என்ற கருப்பினத்தவரை அம்மாகாண காவலர்கள் வன்முறையாக நடத்தியதால் அவர் இறந்தார். போலீஸாரின் இந்த செயலை கண்டித்து மினசோட்டாவில் போராட்டம் வெடித்தது. அதை தொடர்ந்து நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், டெல்லாஸ் என அமெரிக்காவின் பல மாகணங்களிலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் சிலர் அமெரிக்க வெள்ளி மாளிகை முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்த அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்துள்ளனர். இதுகுறித்து பேசிய அதிபர் ட்ரம்ப் “போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த என்னை அனுமதித்திருந்தால் நாய்களை ஏவிவிட்டு அவர்களை விரட்டியடித்திருப்பேன். ஆனால் அதிகாரிகள் சிறப்பாக இந்த விவகாரத்தை கையாண்டனர்” என கூறியுள்ளார்.

போராட்டக்காரர்களை நாயை ஏவி விரட்டுவேன் என அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்