கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது கட்ட ஊரடங்கும் முடிவடைய உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது குறித்த விவரம் பின்வருமாறு....
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67,152 இருந்து 70,756 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,917 இருந்து 22,455 ஆக உயர்ந்துள்ளது
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,206 இருந்து 2,293 ஆக உயர்ந்துள்ளது
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது கட்டமாக மேலும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்நிலையில், இன்று இரவு எட்டு மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் 3வது கட்ட பொதுமுடக்கம் முடிவடைய உள்ள நிலையில் பிரதமர் உரையாற்றுகிறார். இதில் ஊரடங்கு முடிவதால் மக்கள் எவ்வாறான முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவிப்பார் என தெரிகிறது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு, பொது ஊரடங்கு போன்ற காரணங்களால் பொருளார பாதிப்பு, வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள இந்தியாவுக்கும் வல்லரசு நாடான அமெரிக்க பண உதவி அளிக்க முன் வந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அரசு கூறியுள்ளதாவது :
கொரோனா தடுப்பு முன்னெச்சரிகை நடவடிக்கை உள்ளிட்ட பணிகளுக்கு இந்தியாவுக்கு ரூ. 27 கோடி நிதி வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.