திருமணத்திற்கு முன்னர் ஜாலி: டேட்டிங் சென்ற இளம் ஜோடிக்கு கசையடி

புதன், 3 ஆகஸ்ட் 2016 (12:57 IST)
டேட்டிங் என்பது பல நாடுகளில் சாதாரண நிகழ்வாக உள்ளது. ஆனால் ஒரு சில நாடுகளில் அவை இன்னமும் குற்றச்செயலாகவே பார்க்கவே படுகிறது. அதிலும் இஸ்லாமிய நாடுகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும்.


 
 
இந்தோனேசியாவில் அச்சே மாகாணத்தில் திருமணத்திற்கு முன்னர் ஜாலியாக டேட்டிங் சென்ற ஒரு இளம் ஜோடிகளுக்கு கசையடி தண்டனை வழங்கியுள்ளனர்.
 
டேட்டிங் போன்ற செயலுக்கு அங்கு கட்டுப்பாடுகள் இருப்பதால் அந்த ஜோடிகள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக டேட்டிங் சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் டேட்டிங் சென்றது எப்படியோ வெளியில் கசிந்து விட்டது.
 
இதனையடுத்து அவர்களை அல்புர்கான் மசூதி முன்னிலையில் கொண்டு வந்து முதலில் அந்த பெண்ணை மண்டியிட வைத்தும், பின்னர் அந்த நபரை வேறொரு இடத்தில் கட்டி வைத்து கசையடி கொடுத்துள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்