எகிப்து விமானத்தை கடத்தியது பல்கலைக்கழக பேராசிரியர் : அதிர்ச்சி தகவல்

செவ்வாய், 29 மார்ச் 2016 (15:52 IST)
எகிப்து விமானத்தை கடத்தியது தீவிரவாதிகள் இல்லையென்றும், அலெக்சாண்ட்ரியா பல்கலைக்கழக் பேராசிரியர் என்றும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.


 

 
எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரா நகரில் இருந்து, எகிப்தியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் பயணிகளுடன் சைப்ரஸ் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், அந்த விமானம் சைப்ரஸ் நாட்டில் கடத்தப்பட்டது.
 
தீவிரவாதிகள் பைலட்டை மிரட்டி அந்த விமானத்தை சைப்ரஸ் நாட்டின் லார்நாக்கா விமான நிலையத்தில் தரையிறக்கியதாக முதலில் கூறப்பட்டது. பின்னர், கடத்தப்பட்ட அந்த விமானத்திலிருந்து முதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்பட்டனர்.
 
இந்த விமானத்தை கடத்திச் சென்றதற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில்,  அந்த விமானத்தை தீவிரவாதிகள் யாரும் கடத்தவில்லையென்றும், எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் என்று தெரியவந்துள்ளது.
 
அவர் பெயர் இப்ராஹிம் சம்ஹா(27). அவர்தான் வலுக்கட்டாயமாக, அந்த விமானத்தை சைப்ரஸீக்கு கடத்திச் என்று தரையிறக்க வைத்துள்ளார். அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தைக்குப்பின் 5 பயணிகள், 2 சிப்பந்திகள் தவிர்த்து அனைவரையும் விடுவித்துள்ளார். 
 
அவரின் புகைப்படத்தை பயணிகளில் யாரோ ஒருவர் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இப்ராஹிம் ஒரு பல்கலைகக்ழக கால்நடை மருத்துவ துறை பேராசிரியர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும்தொடர்பு இல்லை என சைப்ரஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.
 
இப்ராஹிம் எதற்காக விமானத்தை கடத்தினார் என்று இதுவரை தெரியவில்லை.  

வெப்துனியாவைப் படிக்கவும்