நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மரணம்?: மறைக்கும் பாகிஸ்தான்!

சனி, 29 ஏப்ரல் 2017 (09:46 IST)
இந்தியாவால் நீண்ட காலமாக தேடப்படும் குற்றவாளி தாவூத் இப்ராஹிம் மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாகவும், இதனை பாகிஸ்தான் இந்தியாவிடம் இருந்து மறைப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.


 
 
1980-களில் மும்பையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில், அந்த நாடு மற்றும் தீவிரவாதிகளின் பாதுகாப்பில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது. தாவூத் இப்ராஹிமின் பின்னணியில் தான் 1993-ஆம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 257 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
 
மும்பை தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்படுள்ள தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் தான் இருப்பதாக இந்தியா நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகிறது. இந்தியாவிடம் தாவூத்தை ஒப்படைக்க உதவி கேட்டும் எந்த உதவியும் செய்யாமல் அதனை மறுத்து வருகிறது பாகிஸ்தான்.
 
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் மாரடைப்பு காரணமக தாவூத் இப்ராஹிம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டதாக தகவல்கள் வருகின்ற. மிகவும் கவலைக்கிடமாக அவரது உடல்நிலை இருப்பதாகவும் தற்போது தாவூத் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்றும் கூறப்படுகிறது.
 
ஆனால் இதனை தாவூத்தின் சகோதரர் சோட்டா ஷகீல் மறுத்துள்ளார். 61 வயதான தாவூத் பூரண உடல் நலத்துடன் இருப்பதாகவும், அவர் இறந்துவிட்டதாக வரும் தகவல் வதந்தி எனவும் அவர் கூறியுள்ளார். தாவூத்தின் சகோதரர் சோட்டா ஷகீலும் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி ஆவார்.

வெப்துனியாவைப் படிக்கவும்