ஏமன் உள்நாட்டு போர்; குண்டு வெடிப்புகளில் 18 ஆயிரம் பேர் பலி! – ஐ.நா வேதனை!

வியாழன், 9 செப்டம்பர் 2021 (08:57 IST)
ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போரில் பல்வேறு குண்டு வெடிப்புகளில் 18 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

ஏமன் நாட்டில் அரசப்படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015 முதலாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில் ஏமன் உள்நாட்டு போர் குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் ”உள்நாட்டு போரில் கடந்த 2015ம் ஆண்டு முதலாக 23 ஆயிரம் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தினமும் சராசரியாக 10 வான்வெளி தாக்குதல்கள் நடக்கின்றது. இந்த தாக்குதல்களில் இதுவரை 18 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏமனில் போர் காரணமான வறுமை, பசியால் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்” என்றும் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்