பாலியல் உல்லாசத்திற்கு சிறுமிகள், பெண்களை விலைக்கு வாங்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்

புதன், 27 மே 2015 (03:09 IST)
பாலியல் உல்லாசத்திற்கு சிறுமிகள் மற்றும் பெண்களை ஐ.எஸ் தீவிரவாத அமைப்புகள் விலைக்கு வாங்குவதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
 
சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் யாசிதி என்ற இனத்தை சேர்ந்த சிறுமிகள் மற்றும்  பெண்கள் மீது ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு மோகம் அதிகமாம். இதனால், ஐ.எஸ் தீவிரவாதிகளின் கண்கள் அவர்கள் மீது விழுந்துள்ளது. 
 
இதனால் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடூரமான பாலியல் சித்ரவதைகளுக்கு இந்த யாசிதி என்ற இனத்தை சேர்ந்த சிறுமிகள் மற்றும்  பெண்கள் உள்ளாக்கப்படுகின்றனர்.
 
யாசிதி சமூகத்தை சேர்ந்த அழகான சிறுமிகள் மற்றும் பெண்களை கடத்தும் ஐ.எஸ் தீவிரவாதிகள், அவர்களின் கன்னித்தன்மையை கடுமையான முறையில் சோதனை நடத்துகிறார்களாம். 
 
அந்த சோதனையில், சிறுமிகள் மற்றும் பெண்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள் என உறுதியான உடன், அவர்களை அடிமைகள் சந்தைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அங்கு அவர்கள், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் உள்ளவர்களுக்கு விலைக்கு விற்கப்படுகிறார்கள்.
 
பின்பு, இவர்களை ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் உள்ள உயர் அதிகாரிகள், முதல் போர் வீரர்கள் வரை அனுப்பப்பட்டு பலவந்தமாக பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
 
இவ்வாறு சிறுமிகள் மற்றும் பெண்களை விலைக்கு வாங்கும் தீவிரவாதிகள் அவர்களை 3 மாதத்திற்கு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, அவர்களை மறுவிற்பனை செய்து விடுகின்றனர்.
 
இது குறித்து ஐ.நா சபை அதிகாரியான ஜைனப் பாங்குரா (Zainab Bangura) கூறுகையில், சிரியாவில் உள்ள Ragga நகரில் யாசிதி சமூகத்தை சேர்ந்த அழகான சிறுமிகள் மற்றும் பெண்கள் நாள்தோறும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ள அவல நிலை நீடித்து வருகிறது.
 
சமீபத்தில், இயற்கைக்கு எதிரான அதீத பாலியல் உல்லாசத்திற்கு மறுத்த பெண் ஒருவரை ஐஎஸ் தீவிரவாதி உயிருடன் எரித்து கொலை செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்