ஐரோப்பிய யூனியனில் உறுப்பு நாடாக இருக்கும், இங்கிலாந்து அதில் தொடர்ந்து நீடிப்பதா, வேண்டாமா என்று பொது வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பிரதமர் கேமரூன், இந்தப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். அவரது கட்சியும் இதற்கு உடன்பட்டது.
ஜூன் 23 ஆம் தேதி இந்த வாக்கெடுப்பு நடக்கப் போகிறது. கடந்த ஆண்டில், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கு இங்கிலாந்து மக்களிடம் ஆதரவு இல்லை என்று தகவல்கள் வெளியாகின. தற்போதைய கருத்துக் கணிப்புகளில் அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தங்கள் கருத்துக் கணிப்பு பற்றிப் பேசிய மார்ட்டின் பூன், தொலைபேசி மூலமாக எடுத்த கருத்துக்களும், ஆன் லைனில் எடுத்தவையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கணிப்பையே தந்துள்ளன என்கிறார்.