இங்கிலாந்து துணைபிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா

வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (18:21 IST)
இங்கிலாந்து நாட்டின் துணைபிரதமரும், நீதித்துறை அமைச்சருமான டொமினிக் ராப் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 

இங்கிலாந்து நாட்டில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது தலைமையிலான அமைச்சரவையில், துணை பிரதமர் மற்றும் நீதித்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தவர் டொமினிக் ராப். இவர் தன் துறை சார்ந்த  அதிகாரிகளிடம் மரியாதை குறைவாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், துணை பிரதமர் டொமொனிக் தம் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,  நான் விசாரணைக்கு அழைப்புவிடுத்தேன், ஆனா, கொடுப்படுத்துவதாக கண்டறியப்பட்டார். ராஜினாமா செய்யவதாகக் கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.

ரிஷி சுனக் அக்டோபரில் பதவியேற்றது முதல் இதுவரை 3 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்