பிரதமர் மனைவிக்கு ஒரே நாளில் ரூ.500 கோடி நஷ்டம்.. அதிர்ச்சி தகவல்..!

புதன், 19 ஏப்ரல் 2023 (08:08 IST)
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மனைவிக்கு நேற்று ஒரே நாளை 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக சமீபத்தில் ரிஷி சுனக் பதவியேற்றார் என்பதும் அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதும் தெரிந்ததே. அவரது மனைவி அக்ஷிதா மூர்த்தி இந்திய தொழிலதிபர் இன்போசிஸ் நாராயணமூர்த்தி மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நேற்று இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்த நிலையில், அந்நிறுவனத்தின் பங்குகளை வைத்திருந்த அக்ஷிதா மூர்த்திக்கு நேற்று ஒரே நாளில் 500 கோடி ரூபாய் நஷ்டம் என்று கூறப்படுகிறது. 
 
இதன் காரணமாக அவரது சொத்து மதிப்பு குறைந்துள்ளதாகவும் தற்போது அவரது சொத்து மதிப்பு 6000 கோடியாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக பங்குச்சந்தையில் இன்போசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட ஐடி துறைகளில் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்