கத்தார் நாட்டை கழட்டிவிட்ட அரபு நாடுகள்

திங்கள், 5 ஜூன் 2017 (15:50 IST)
கத்தார் நாடு தீவிரவாத்துடன் தொடர்பில் இருப்பதால் அந்நாட்டுடன் உறவுகளை துண்டித்துக்கொள்வதாக சவுதி அரேபியா, எகிப்து, பக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு கூட்டமைப்பு நாடுகள் அறிவித்துள்ளன.


 

 
சவுதி அரேபியா தலைமையிலான அரபு கூட்டமைப்பு படைகள், ஏமனில் கிளர்ச்சியாளர்கள், தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றன. ஆனால் கத்தார் நாடு அல்கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கத்தார் நாட்டை பிற அரபு நாடுகள் தங்கள் நேச நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கயுள்ளனர்.
 
இதைத்தொடர்ந்து சவுதி அரேபியா நாடு தனது எல்லைகளை மூடிவிட்டதாக தெரிவித்துள்ளது. தீவிரவாதத்தில் இருந்து தங்கள் நாட்டை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
 
இதுகுறித்து சவுதி அரேபியா அதிகாரி ஒருவர் அளித்துள்ள போட்டியில், கத்தாருடனான தரைவழி, வான்வழி மற்றும் கடல்வழி போக்குவரத்து என அனைத்து வழி உறவுகளும் துண்டிக்கப்பட்டுவிட்டது என்றார்.

அரபு நாடுகளை தொடர்ந்து எகிப்து மற்றும் பக்ரைன் ஆகிய நாடுகளும் கத்தாருடன் தொடர்பை துண்டித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்