இளவரசர் ஃபிலிப் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாத பிரதமர் போரிஸ் ஜான்சன் !

திங்கள், 12 ஏப்ரல் 2021 (13:32 IST)
பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 
எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்குக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அரச குடும்பத்து இறுதிச் சடங்கு வின்சர் கோட்டையில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில், வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி சனிக்கிழமை, பிரிட்டன் நேரப்படி மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த இறுதி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படவிருக்கின்றன. 
 
கொரோனா கால கட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே அதில் பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. எனவே, பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 
ராஜ குடும்பத்தின் தேவைக்கு ஏற்ப செயல்பட விரும்பினேன். ராஜ குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் நான் அதில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்