இதுகுறித்து அதிபர் டிரம்ப் தனது டுடிவிட்டரில் கூறியிருப்பதாவது, 'அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு அனுமதி கிடையாது. இதை எனது ஜெனரல்கள் மற்றும் ராணுவ நிபுணர்களுடன் ஆலோசித்த பின்னரே பரிந்துரை செய்கிறேன்.
ராணுவத்தில் இருக்கும் திருநங்கைகளால் அதிக மருத்துவ செலவு மற்றும் பிளவுகள் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நம்முடைய ராணுவம் மிகப்பெரிய வெற்றிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்பால் சுமார் 13 லட்சம் திருநங்கைகள் பாதிக்கப்படுவார்கள் என்று அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.