உலகின் முதல் AI சி.இ.ஓ.. போலந்து நிறுவனம் நியமனம்...!

திங்கள், 13 நவம்பர் 2023 (14:49 IST)
AI  என்ற செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இந்த டெக்னாலஜி காரணமாக மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.  

பல்வேறு துறைகளில் AI டெக்னாலஜி நுழைந்து விட்ட நிலையில் தற்போது முதன்முதலில் உலகிலேயே சீஓ என்ற பதவியும் AI டெக்னாலஜி ரோபோவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

போலந்து நாட்டைச் சேர்ந்த பிரபல தனியார் நிறுவனமான டிக்டடோர் என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்ற சி.இ.ஓ பதவிக்கு மிகா என்ற செயற்கை நுண்ணறிவு ரோபோ நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகிலேயே முதல் முதலாக ஒரு நிறுவனம் சிஇஓ என்ற பதவிக்கு ஒரு AI ரோபோவை நியமனம் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

AI டெக்னாலஜி பல்வேறு துறைகளில் நுழைந்து விட்ட நிலையில் தற்போது சிஇஓ பதவி வரைக்கும் வந்து விட்டதால் இந்த AI டெக்னாலஜியின் கீழ் தான் மற்ற மனிதர்கள் வேலை பார்க்க வேண்டிய நிலை ஏற்படும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்