மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா பயணித்த விமானம் மாயமான நிலையில் அது மலையில் மோதி விபத்திற்கு உள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Saulos Chilima
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவியின் துணை அதிபராக பதவி வகித்து வந்தவர் சவ்லோஸ் சிலிமா. இன்று காலை 9.17 மணியளவில் மலாவி தலைநகர் லிலோங்கில் இருந்து ராணுவ விமானம் ஒன்றில் சவ்லோஸ் மற்றும் ஒன்பது பேர் சூசு விமான நிலையம் நோக்கி பயணித்த நிலையில் காலை 10.02 மணிக்கு சூசுவை நெருங்கியபோது மோசமான வானிலை காரணமாக மீண்டும் தலைநகருக்கே திருப்பப்பட்டது.
இந்நிலையில் திடீரென விமானம் ரேடாரில் இருந்து மாயமானது. அதை தொடர்ந்து மலாவி ராணுவம் மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் ராணுவ விமானம் மலையில் மோதி நொறுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது மலாவி அதிபர் லாசரஸ் சக்வேரா விமானத்தில் பயணித்த துணை அதிபர் மற்றும் 9 பேரும் மரணமடைந்ததாக அறிவித்துள்ளார். அதை தொடர்ந்து அவர்களது மறைவுக்கு பல உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.