’அலிபாபா’ தலைவர் ஒரு கம்யூனிஸ்டா... உலகமே ஆச்சர்யம்
செவ்வாய், 27 நவம்பர் 2018 (18:14 IST)
சீனாவில் அலிபாபா என்ற இமாலய ஆன்லைன் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருபவர் ஜாக் மா. ஆரம்பத்தில் ஏராளமான கஷ்டங்களை அனுபவித்து பின் ஏணிபடியாக பல வெற்றிகளை ருசித்து இன்று உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராக எல்லோராலும் பரவலாக அறியப்படுகிறார்.
ஆன்லைன் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் ஜாக்மா தன் அலிபாபா நிறுவனத்தை ஏராளமான உழைப்பை கொடுத்துள்ளார் . இன்று அது ஆலமரமாக இணையதள வர்த்தகத்தில் வேரூன்றியுள்ளது.
இத்தகைய பெருமைகளுக்கு சொந்தக் காரரான ஜாக் மா ஒரு கம்யூனிஸ்ட் காரர் என்று சீன அரசு தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி கம்யூனிஸ்டாக இருப்பது பலரையுல் வியக்க வைத்துள்ளது.
தொழிலாளரகளிடம் ஜாக்மா காட்டும் அன்பும் அக்கரையும் கூட கம்யூனிஸ்டின் சாரங்கள் தானே என்று உலகம் இந்நேரம் உணரத் தொடங்கி இருக்கும்.