மகளைப் பாடம் படிக்க வைக்க நாய்க்கு பயிற்சியளித்துள்ள தந்தை : வைரல் வீடியோ

செவ்வாய், 14 மே 2019 (20:17 IST)
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள குய்சோ மாகாணத்தில் வசித்து வருபவர் சூ லியாங். இவர் தன் வீட்டில் ஒரு நாயை செல்லமாக வளர்த்துக் கொண்டிருக்கிறார்.
இவர் தனது மகள் பள்ளிக்கூடத்தில் நடத்துகிற பாடங்களைப் வீட்டில் படிக்காமல் எந்நேரமும் செல்போனில் நேரத்தை செலவிட்டு வருவதால் ஒரு முடிவெடுத்துள்ளார்.
 
அதாவது தனது மகளை கண்காணிக்க தன் விட்டில் வளர்த்து வரும் நாயைக் கொண்டு அதற்கு பயிற்சி அளித்து மகளைக் கண்காணிக்க எண்ணினார்.
அதன்படி குறிப்பிட்ட காலம் அந்த நாயிக்கு  பயிற்சி அளித்த பின்னர் தற்போது பாடம் படிக்கும் போது விளையாடினாலோ, அல்லது கவனம் சிதறி செல்போன் விளையாடினாலோ ஒரு கண்காணிப்பாளர் போன்று எச்சரித்து பாடம் படிக்கச் சொல்கிறது. இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்