2 வயதில் ஒரு நாளைக்கு 40 சிகரெட் ; இந்த சிறுவனை ஞாபகம் இருக்கிறதா?

புதன், 30 நவம்பர் 2016 (15:12 IST)
கடந்த 8 வருடங்களுக்கு முன்பு, 2 வயது சிறுவன் ஒருவன் சிகரெட் குடிக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.


 

 
இந்தோனோசியல் வசித்து வரும் அவனுக்கு, அவனுடைய தந்தையே சிகரெட் குடிக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுத்ததாகவும், இதனால் ஒரு நாளைக்கு 40 சிகரெட் வரை அச்சிறுவன் புகைத்து தள்ளுவதாக செய்திகள் வெளியானது ஏராளமானோருக்கு நினைவில் இருக்கும்.
 
தொடர்ந்து சிகரெட் குடித்ததால் அச்சிறுவனுக்கு பசி அதிகமாக எடுத்துள்ளது. இதனால் அதிக அளவு உணவை சாப்பிட்டதால், அவனின் எடையும் அதிகரித்துக் கொண்டே போனது.
 
அச்சிறுவனின் உடல் நிலையை சரி செய்ய போதுமான பணம் அவனின் குடும்பத்தினரிடம் இல்லை. அதை அறிந்த இந்தோனேசிய அரசு அவர்களுக்கு உதவ முன் வந்தது. 
 
அதையடுத்து, சிறுவனுக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதனால் சிகரெட் பழக்கத்தை முற்றிலும் அச்சிறுவன் நிறுத்தினான். அதனால் அவரின் உடல் எடை 24 கிலோ அளவுக்கு குறைந்தது. 
 
அந்த சிறுவனின் தற்போதைய புகைப்படம் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்