பீர் குளியல் கேள்வி பட்டிருக்கிறீர்களா? : வீடியோ பாருங்கள்

சனி, 23 ஜூலை 2016 (13:09 IST)
ஆஸ்திரியா நாட்டில் பீர் மதுபானத்தை கொண்டு உலகிலேயே முதல் முதலாக ஒரு நீச்சல் குளம் உருவாக்கப்பட்டுள்ளது.



உலகின் சில பகுதியில் குடிக்கவே தண்ணீருக்கு வழி இல்லாத போது, ஆஸ்திரியாவில் குளிப்பதற்கு பீர் வழங்கப்படுகிறது. ஆஸ்திரிய ப்ரூவரின் உள்ள ஸ்டார்கென்பெர்கர் கோட்டையில் தன் இந்த நிகழ்வு அரங்கேருகிறது.

இந்த பீர் நிரப்பிய நீச்சல் குளத்தில் குளித்தால் உடல் தசைகள் பளபளப்பாகும் என்று நீச்சல் குள நிர்வாகிகள் விளம்பரம் செய்கிறார்கள். இதில் குளிக்க முன்கூட்டியே புக்கிங் செய்வது அவசியம். ஆஸ்திரியா வரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் இங்கு சென்று குளித்துவிட்டு தான் திரும்புகிறார்கள்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்