இனிவரும் மாதங்களிலும் மீண்டும் பணிநீக்க நடவடிக்கை: சுந்தர்பிச்சை அதிர்ச்சி அறிவிப்பு..!

Mahendran

வியாழன், 18 ஜனவரி 2024 (17:22 IST)
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர்பிச்சை, வரும் மாதங்களிலும் பணிநீக்க நடவடிக்கைகள் இருக்கும் என்று ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் கூகுள் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், "கூகுள் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளன. பொருளாதார நிலைமை மோசமடைந்துள்ளதால், எங்கள் செலவுகளைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வரும் மாதங்களிலும் சில பணிநீக்க நடவடிக்கைகள் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
 
சுந்தர்பிச்சை தனது மின்னஞ்சலில், "எங்கள் ஊழியர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியளிக்கும் என்பதை அறிவேன். ஆனால், எங்கள் நிறுவனத்தின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கைகள் அவசியம்" என்றும் கூறியுள்ளார்.
 
இந்த எச்சரிக்கை, உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்திலும் பொருளாதார மந்தநிலையின் தாக்கம் எதிரொலிப்பதைக் காட்டுகிறது. கூகுள் மட்டுமின்றி இன்னும் சில தொழில்நுட்ப நிறுவனங்களும் பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்