பத்மபூஷன் விருதை பெற்றுக்கொண்ட சுந்தர் பிச்சை

சனி, 3 டிசம்பர் 2022 (16:43 IST)
இன்று அமெரிக்காவில் சான்பிரஸ்கோவில் நடந்த  நிகழ்ச்சியில் பத்மபூசன் விருதை இந்திய தூதர் தரன் ஜித் சிங் சந்து வழங்க அதை கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பெற்றுக் கொண்டார்.

குடியரசு தினத்தையொட்டி 2022 ஆம் ஆண்டிற்காகன் பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்த விருது பட்டியலில் கூகுள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சைக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டது.

மதுரையில் பிறந்து, காரக்பூரில்  உள்ள ஐடிடியில் பொறியியல் பட்டம் பெற்று, தற்போது கூகுளில் சிஇஓவாக பணியாற்றி வருகிறார்.

இந்த  நிலையில், இந்திய அரசு அவருக்கு பத்ம விபூசன் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய தூதர் தரன் ஜித் சிங் விருதை சுந்தர் பிச்சைக்கு வழங்கினார்,

ALSO READ: சுந்தர் பிச்சை மீது வழக்கு தொடர்ந்த பாலிவுட் இயக்குனர்!
 
இந்த விருதைப்பெற்றுக் கொண்டு பேசிய சுந்தர் பிச்சை, ''இந்த உயரிய கவுரவம் அளித்துள்ள இந்திய அரசுக்கும், மக்களுக்கும்   நன்றி ''எனத்  தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்