இங்கிலாந்தை உலுக்கிய இமோஜின் புயல்: வாகனங்களை தூக்கி விசிய சூறைக்காற்று

செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (14:53 IST)
இங்கிலாந்தை  இமோஜின் புயல் தாக்கியது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


 

 
இங்கிலாந்தின் கடலோர பகுதியை இந்த புயலால் கடுமையாக தாக்கியுள்ளது. இதனால், அங்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
 
160 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் மின்கம்பங்கள் மற்றும் சாலையோர மரங்கள் சாய்ந்தன.
 
கிரிஸ்டல் நகரமே இருளில் மூழ்கியுள்ளது. பல்வேறு இடங்களில் கட்டிடங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
 
சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி உள்ளிட்ட வாகனங்களும் சூறைக்காற்றால் தூக்கி வீசப்பட்டுள்ளன. பலத்த காற்று காரணமாக கடலில் 50 அடிக்கு மேலாக அலைகள் எழுந்தன.
 
முன்னதாக கிரிஸ்டல் நகர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், அங்கு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் நிவாரண பொருள்களை எடுத்து செல்லுதல், மீட்டுப் பணிகள் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிபிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்