இலங்கை அதிபர் தேர்தல் தேதி அறிவிப்பு: அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பு!

புதன், 18 செப்டம்பர் 2019 (19:34 IST)
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்கும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் இலங்கை அதிபர் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது 
 
 
இலங்கை அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 16ஆம் தேதி நடைபெறும் என்று இலங்கை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட அக்டோபர் 7 ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி உள்ளன
 
 
இலங்கை அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது தெரிந்ததே. பொதுஜன பெரமுனவும், அதிபர் மைத்திரிபாலவின் சிறிலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதிபர் வேட்பாளராக மீண்டும் மைத்திரிபாலா போட்டியிடுவார்.
 
 
மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் அதிபர் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கே போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை ரணில் விக்கிரமசிங்கே போட்டியிடவில்லை என்றால் கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச ஆகியோர்களில் ஒருவர் அதிபர் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்