இன்று முதல் பர்தா அணிய தடை: இலங்கை அரசு அதிரடி அறிவிப்பு

திங்கள், 29 ஏப்ரல் 2019 (08:11 IST)
இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 300 பேர் கொல்லப்பட்ட நிலையில், பாதுகாப்பு நடவடைக்கைகளை இலங்கை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக இலங்கையில் இன்று முதல் பர்தா அணிய தடை விதிக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே பர்தா அணிந்தவர்கள் உள்ளே வரவேண்டாம் என இலங்கையின் பல ஷாப்பிங் மால்களில் போர்டு வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இலங்கை அரசு இதனை தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த பர்தா தடை குறித்து இலங்கை அரசு கூறிய விளக்கத்தில், 'மக்களின் அடையாளங்களை உறுதி செய்யவே இந்த தடை என்றும், அடையாளங்களை உறுதிப்படுத்துவதில் அடிப்படை அளவீடாக முகம் இருப்பதால் அந்த முகத்தை மறைக்கும் பர்தாவுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு எந்த ஒரு மதத்தினர்களையும் சமூகத்தினர்களையும் புண்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது
 
இலங்கை அரசின் இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இருந்தாலும், ஒரு பிரிவினர் இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்