ஊரடங்கை கண்டித்து மொட்டை அடித்த வியாபாரிகள்!

செவ்வாய், 25 ஜனவரி 2022 (20:15 IST)
ஊரடங்கை கண்டித்து மொட்டை அடித்த வியாபாரிகள்!
ஊரடங்கை கண்டித்து வியாபாரிகள் மொட்டை அடிக்கும் போராட்டத்தை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தென் கொரியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை கண்டிக்கும் விதமாக 200க்கும் மேற்பட்டவர்கள் திடீரென ஒன்று திரண்டு தலையில் மொட்டை அடித்துக் கொண்டனர்
 
சீன புத்தாண்டு வர உள்ளதை அடுத்து மக்கள் கூட்டம் சேர்வதை தடுக்க மேலும் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என தென்கொரிய அரசு அறிவித்துள்ள நிலையில் கடை வாடகை கூட செலுத்த முடியாத நிலையில் வியாபாரம் இன்றி தவித்து வருவதாகவும் இந்த நிலையில் மேலும் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு என்பது தங்களுடைய வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்படும் என்றும் எனவே ஊரடங்கை தளர்த்துமாறு மொட்டை அடித்து வியாபாரிகள் தென்கொரிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்