இதனால் அமெரிக்கா தனது போர்கப்பல்களை தென்கொரியா கடற்பகுதியில் நிறுத்தியுள்ளது. மூன்றாம் உலக ஏற்படும் என்று உலக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தென்கொரியா நாடு, ஏவுகணை தடுப்பு கவனுக்கு அமெரிக்கா கேட்டும் 100 கோடி டாலர் கொடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
எங்கள் நாட்டில் அமெரிக்கா அமைக்கும் ஏவுகணை தடுப்பு கவனுக்கு டொனால்ட் டிரம்ப் கேட்பதுபோல் 100 கோடி டாலர் பணத்தை நாங்கள் தர முடியாது. ஒப்பந்தத்தின்படி, ஏவுகணை தடுப்பு கவன் அமைப்பதற்கான இடத்தையும் தேவையான வசதிகளையும் மட்டும் எங்களால் செய்து தர முடியும். அதை நிர்வகிப்பது, பராமரிப்பது போன்றவை அமெரிக்க அரசின் பொறுப்பாகும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.