தென் கொரியாவில் வேகமாகப் பரவிவரும் மெர்ஸ் நோய்: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு

செவ்வாய், 16 ஜூன் 2015 (13:47 IST)
தென் கொரியாவில் மெர்ஸ் வைரஸ் வேகமாகப் பரவிவருகின்றது, அந்நாட்டில் மெர்ஸ் நோய்க்கு இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 154 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
தென்கொரியாவில் ‘மெர்ஸ்’ என்ற மூச்சுத்திணறல் நோய் வேகமாகப் பரவி வருகிறது. அதனால் அங்கு, தொடர்ந்த பலர் உயிரிழந்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து இன்று மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்நோய்க்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
 
சிபோல் நகரில் உள்ள சாம்சங் மருத்துவ மைய மருத்துவமனையில் புதிதாக மெர்ஸ் நோய் தாக்கிய 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
சாம்சங் மருத்துவமனையில்தான் மெர்ஸ் நோய் தாக்கிய ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், அங்கு பிற நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் 400 நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை மருத்துவ ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுவரை அந்நாட்டில் 154 பேர் "மெர்ஸ்" நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்